சிறப்பு உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம் pt desk
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: பைக் மீது கார் மோதிய விபத்து - சிறப்பு உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பரிதாபம்

ராணிப்பேட்டை அருகே பணியை முடித்து வீடு திரும்பும் போது கார் மோதிய விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பலராமன் (52). இவர், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு ஆற்காடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாஜ்புரா அருகே பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை விபத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவ்விபத்து குறித்து ஆற்காடு கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.