திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப திருவிழாவையொட்டி, கிரிவலம் தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை காவல் துறை வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல், ஆசிர்வதித்தில் என்ற போர்வையில் ஏமாற்றியும், மிரட்டியும் பணம் வசூலிப்பது, குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்பாகவோ, கிரிவலப்ப்பாதையிலோ கற்பூரம் ஏற்றக்கூடாது.
கால்நடை உரிமையாளர்கள், கால்நடைகளை கிரிவலப்பாதையில் உலவ விடக்கூடாது .
உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களிம் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
பக்தர்கள் கிரிவல பாதையை ஓட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பதும், மலையின் மீது ஏற முயற்சிப்பது குற்றம் . அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கிரிவலபாதையில் கடைகள் அமைத்தோ, தங்கியோ கேஸ் சிலிண்டர் பயன்படுத்தியோ சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனிடையே, கார்த்திகை மகா தீபத்தையொட்டி, திருவண்ணாமலையில் 25 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னை, திண்டிவனம், புதுச்சேரி ஆகிய வழித்தடங்களிலிருந்து செஞ்சி, கீழ்பென்னாத்தூர் வழியாக திருவண்ணாமலை வரும் பேருந்துகள், திருவண்ணாமலை மார்கெட் கமிட்டி தற்காலிக பேருந்து நிலையத்தை வந்தடையும். பின்பு அங்கிருந்து புறப்படும்.
மகாதீபத்திற்கு வரக்கூடிய வாடகை பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும், தற்காலிக பேருந்து நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும். மீறினால் அவை அப்புறப்படுத்தப்படும்.
பக்தர்கள், 9363 - 622 - 330 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு ஹலோ என குறுஞ்செய்தி அனுப்பி, தற்காலிக பேருந்து நிலையத்திற்கான கூகுள் மேப்பினை பெறலாம்.