கைதானவர்கள்
கைதானவர்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

"உன்னோட செல்ஃபோன்னா நம்பர் சொல்லு கால் பண்றேன்.." திருடர்களுக்கு செக் வைத்து தூக்கிய காவலர்கள்!

யுவபுருஷ்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொது, சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கையில் அதிகமான செல்போன்கள் இருந்தது. தொடர்ந்து, அந்த செல்போன்கள் யாருடையது என போலீசார் விசாரித்துள்ளனர்.

அதற்கு, இருவரும் போன்கள் தங்களுடயதுதான் என்று பதில் கூறியுள்ளனர். போலீஸாரோ, “அப்படி என்றால் செல் போனின் நம்பரை சொல், கால் பண்ணுறேன்” என்று கூறியுள்ளார். இதற்கு இருவரும் திருத்திருவென முழித்து நின்ற நிலையில், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இவர்கள் இரவு தூங்கும் போது வீட்டிற்கு வெளியே அல்லது கதவு திறந்த நிலையில் தூங்கும் மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலை உள்ளவர்களை குறிவைத்து அவர்களின் செல்போன்களை பல வருடங்களாக திருடி அன்றைய செலவுகளை செய்து வந்தது தெரியவந்தது‌.

மேலும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மணிகன்டன் , ராஜசேகர் என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே 6 குற்றவழக்குகள் உள்ளது எனவும் போல்சாருக்கு தெரியவந்தது. இந்நிலையில், இவர்கள் செல்போன் திருடிய தா‌.பழூர் அருகே உள்ள இருகையூர் சக்திவேல், கவிதா, ரமேஷ் ஆகியோரிடம் புகாரைப் பெற்று அவர்களை கைதுசெய்தனர்.