மோடி
மோடி ட்விட்டர்
தமிழ்நாடு

“மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

webteam

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பட்டு சால்வை அணிவித்து பிரதமரை வரவேற்றார். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி...

“தமிழ்நாட்டுக்கு வரும்போது எனக்கு உற்சாகம் கிடைக்கிறது. சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது திமுக அரசு மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக மத்திய அரசு அனுப்பும் பணத்தை திமுக கொள்ளையடிப்பதற்கு இனி நாங்கள் விடப்போவதில்லை. திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்காகவே செலவிடப்படும் என்பது என் உத்தரவாதம்.

சிலகாலம் முன்பு சென்னையில் பெரும் வெள்ளம் வந்தது. சென்னை மக்களுக்கு பெரும் துயரம் வந்தது. வெள்ளப்பெருக்கால் துயரம் வந்தபோது திமுக அரசு அவதிப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக அவர்களின் துயரங்களை அதிகப்படுத்தும் வேலையைச் செய்தது. திமுகவினர் வெள்ள மேலாண்மை செய்யாமல், ஊடக மேலாண்மை செய்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.

PM Modi

I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் குடும்பத்துக்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர். என்னை பொறுத்தவரை தேசத்துக்கே முதன்மை. தேசமே எனது குடும்பம். தமிழகத்தில் போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது” என்றார்.

முன்னதாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நாட்டு மக்களின் நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை பிரதமர் அர்ப்பணித்துள்ளார். ஒரே குடும்பமாக பாஜக உள்ளது என்பதை தேர்தலில் நிரூபிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.