“எங்களை ஒழிப்பேன் என்று சொல்வதா? நான் பழைய துரைமுருகனாக இருந்தால் பதில் வேறு மாதிரி இருக்கும்..”

வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதற்கு சைகை செய்த அமைச்சர் துரைமுருகன், வடநாட்டில் பன்றி குட்டி போடுவது போல் தொகுதிகள் பெருகிக் கொண்டே இருப்பதாக குற்றச்சாட்டினார்.
"எல்லோருக்கும் எல்லாம்" நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்
"எல்லோருக்கும் எல்லாம்" நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்புதிய தலைமுறை

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் "எல்லோருக்கும் எல்லாம்" என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

"எல்லோருக்கும் எல்லாம்" நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்
"எல்லோருக்கும் எல்லாம்" நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “திமுக, காங்கிரஸ் கட்சியில்தான் வாரிசு அரசியல் உள்ளதா? ஏன் அதிமுகவில் இல்லையா? அதிமுக - பாஜக இடையே தெரிந்த காதல் ஒருபக்கம் தெரியாத காதல் மறுபக்கம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என தைரியமாக சொல்கிறார். ஆனால், பிரதமர் ஒரு வார்த்தை கூட அதிமுகவை பற்றி பேசவில்லை.

பிரதமர் அவர்களே, தமிழ்நாடு உங்களுக்கு புது அனுபவம், இது வீரம் செறிந்த மண், எங்களை போய் ஒழிக்கிறேன் என சொல்கிறீர்களே? அப்படி சொன்னவர்கள் எல்லாம் ஒழிந்து போனார்கள். பிரதமருக்கு அகங்காரம் இருக்கக் கூடாது. நான் பழைய துரைமுருகனாக இருந்தால் பதில் வேறு மாறி இருக்கும். பொறுப்புள்ள கட்சியில் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறேன். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் இருந்த இடத்தில் இருப்பதால் அமைதியாக உள்ளேன்.

செங்கல்பட்டில் "எல்லோருக்கும் எல்லாம்" நிகழ்ச்சி
செங்கல்பட்டில் "எல்லோருக்கும் எல்லாம்" நிகழ்ச்சி

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி 26 தொகுதியாக குறைக்கப்பட உள்ளது. ஆனால், வடநாட்டில் பன்றி குட்டி போடுவது போல் தொகுதிகள் பெருகிக் கொண்டு இருக்கிறது. வடநாட்டில் வெள்ளம், நிலச்சரிவு வந்த போது தமிழகத்தில் இருந்து நிதி கொடுத்தோம். தற்போது இங்கு வெள்ளம் வந்து பல பேர் இறந்தார்கள். இதற்கு யாரும் நிதி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, வந்து எட்டிகூட பார்க்கவில்லை” என்று பேசினார்.

தொடர்ந்து வாரிசு அரசியல் என்றால் என்ன? என்பதற்கு சைகை மொழியில் காட்டிய ரியாக்சன் கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com