மேற்காசியப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை காரணம் காட்டி, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் புதிய விலைகள் அமலுக்கு வந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்த உயர்வு, ஏற்கனவே எரிவாயு விலையால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் சிரமப்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேற்காசியப் போர் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் எனமத்திய அரசு கூறியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 67 காசுகளுக்கும், டீசல் 95 ரூபாய் 25 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இதர பெருநகரங்களைப் பொறுத்தவரை, டெல்லியில் பெட்ரோல் 97 ரூபாய் 77 காசுகளாகவும், மும்பையில் 106 ரூபாய் 68 காசுகளாகவும் உள்ளது.
கொல்கத்தாவில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை 108 ரூபாய் 74காசுகளை எட்டியுள்ளது. பெட்ரோல்,டீசல் விலை 4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைஉயர்வால் மற்ற பொருட்களின் விலையும் உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாகப் பொருளாதாரநிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்கெனவே சமையல் எரிவாயு விலைஉயர்வால் கடும் சிரமத்துக்குள்ளாகியிருக்கும் மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.