\
25,000 Tons Gold
25,000 Tons GoldHidden Gold

வெளிவருமா இந்தியாவின் பொக்கிஷம்.. மறைந்து கிடைக்கும் 25,000 டன் தங்கம்! மாறுமா இந்திய பொருளாதாரம்?

இந்தியாவின் பொக்கிஷமாக இருக்கும் 25,000 டன் தங்கம் கிடைத்தால் இந்தியாவின் பொருளாதாரமே மாற்றம் காணும் என பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published on
Summary

தங்க இறக்குமதி வரி 15% ஆக உயர்த்தப்பட்டதால் தங்க விலை வரலாறு காணாத உயரத்தை எட்டியுள்ளது. விலை உயர்வால் மக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பார்கள் என அரசு நம்புகிறது. மத்திய அரசின் கணக்குப்படி, பொதுமக்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் 25,000 டன் தங்கத்தின் ஒரு பகுதியை சந்தையில் கொண்டு வந்தால், இறக்குமதி குறைந்து இந்திய பொருளாதாரம் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே அதிக அளவு தங்கம் வாங்கும் நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தங்கத்தில் பெரும்பான்மையானவை இறக்குமதியை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகளவில் அந்நிய செலாவணி வெளியேறி வரும் நிலையில், இதனால் ரூபாயின் மதிப்பு கடுமையாக குறைந்து வருகிறது.

இந்த சூழலில், தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தின் மூலம் தங்கம் வாங்குவதை பொதுமக்கள் குறைப்பார்கள் என மத்திய அரசு கருதுகிறது.

அதே நேரம் உலகத்திலேயே அதிகளவில் தங்க இருப்பு உள்ள நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்த தங்கம் அனைத்தும் பொதுமக்களிடம் நகையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் மதிப்பீட்டின் படி, பொதுமக்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தின் அளவு மட்டும் 25 ஆயிரம் டன் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Gold
Gold Gold

பொதுமக்களிடம் இப்படி பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவே இறக்குமதி தங்கத்தின் மீதான வரி உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 25 ஆயிரம் டன் தங்கத்தின் சிறிய அளவு மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தால், அதனால் தங்கத்தின் இறக்குமதி அளவு குறைந்து நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

25,000 Tons Gold
ரத்து செய்யப்படுமா பரந்தூர் திட்டம்? சென்னையின் புதிய விமான முனையம் எது? புதிய அரசுக்கு சிக்கல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com