பெரியார் அறிவுலகம் Pt web
தமிழ்நாடு

பெரியார் அறிவுலகம்; ஜெயந்தி ஐஏஎஸ் பதவி பறிப்பு - தமிழக அரசு அதிரடி!

பெரியார் அறிவுலக போலி நூல்கள் விவகாரத்தில் பொது நூலகத் துறை ஜெயந்தி ஐஏஎஸ் பதவி பறிப்பு.

Premkumar S

கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்துவைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தச்சூழலில் தான், பொது நூலகத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ஜெயந்தி ஐஏஎஸ்ஸிடம் இருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

பெரியார் அறிவுலகம்

ஜெயந்தி ஐஏஎஸ், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் நிலையில், கூடுதலாக பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்நிலையில், அவரிடம் இருந்து பொது நூலகத்துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பு திரும்பப் பெறப்பட்டு, புதிய பொது நூலக இயக்குநராக ஷாஜீவனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயந்தி ஐஏஎஸ், TRB தலைவர் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூலகம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள சூழலில், பொது நூலகத்துறை நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம் கவனம் பெற்றுள்ளது.