பொங்கல் தொகுப்பில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், ஒரு நிறுவனம் ஒரு பொருளை 42 ரூபாய் விலை குறைத்து கொடுக்க ஒப்புக்கொள்கிறது என்றால் அதனுடைய தரம், எடை எப்படி இருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். தரமில்லாத பொருட்கள் வழங்கப்பட்டதன் மூலம் ஆயிரத்து 250 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் யாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன? பொருட்களின் தரம், எடை குறித்த நிபந்தனைகள் ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்றும் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்கலாம்: ”சேலம் 8 வழிச்சாலை: மத்திய அரசு கடிதத்துக்காக காத்திருக்கிறோம்”- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி