சேலம் 8 வழிச்சாலை விவகாரம் குறித்து பேசியுள்ளார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு. இதுதொடர்பான அவர் “சேலம் 8 வழிச்சாலை குறித்து மத்திய அரசு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசு கடிதம் அனுப்பும்பட்சத்தில், அதன்பின் முதல்வரின் கொள்கை முடிவுபடி செயல்படுவோம்” என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை யானைகவுனி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “சென்னையில் நெடுஞ்சாலை துறையின் கீழ் உள்ள சாலைகளை சீரமைக்க 263 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றது. அனைத்து சாலைகளையும் மில்லிங் செய்து மறுசீரமைக்க அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இந்த விஷயத்தில் சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே பணிகள் நடைபெறும். மாநகரில் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் 258 கி.மீ நீளமுள்ள சாலை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவான திருப்புகழ் தலைமை அளித்த பரிந்துரை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இனி வரும் நாள்களில் அந்த பரிந்துரையின் அடிப்படையில் பணிகள் நடைபெறும்.
சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தை பொறுத்தவரை, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அரசு இதுவரை அதுகுறித்து கடிதமேதும் மாநில அரசுக்கு எழுதவில்லை. மத்திய அரசு கடிதம் அனுப்பும் பட்சத்தில் குறித்து கொள்கை முடிவு படி செயல்படுவோம்” என்றார்.
சமீபத்திய செய்தி: தூத்துக்குடி: கோவிலில் பெண் பக்தர்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமரா- போலீசார் விசாரணை
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!