திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த சந்திப்பில், தமிமுன்அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தமிமுன்அன்சாரி தெரிவித்தார்.
கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர்தேசம் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒருதொகுதியை திமுக ஒதுக்கி உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுககூட்டணி பங்கீட்டு குழுவுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன்அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன்அன்சாரி, தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியிருப்பதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கும் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறினார். இதே போல திமுக கூட்டணியில் உள்ள தமிழர் தேசம் கட்சி, எஸ்டிபிஐ கட்சி ஆகிய வற்றுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல திமுக கூட்டணியில் உள்ள முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.