2026 தேர்தல்| திருவாரூர் to கொளத்தூர்.. முதல்வரின் பரப்புரைப் பயணத்திட்டம் வெளியீடு!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரப்புரைத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. திருவாரூரில் தொடங்கும் இந்த பயணம், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 38 இடங்களில் உரையாற்றி, கொளத்தூரில் முடிவடைகிறது. ஏப்ரல் 6 அன்று வேட்புமனு தாக்கல் செய்யப்படும்.
சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரப்புரைத் திட்டம்வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாம் தேதி மாலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் அவர் பரப்புரையைத் தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.
மறுநாள் திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சாலை வலம் (Road Show) மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். நெல்லை, மதுரை, தஞ்சை, நாகர்கோவில், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான 38 இடங்களில் முதல்வர் உரையாற்றுகிறார். ஏப்ரல் ஆறாம் தேதி அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். தேர்தல் விதிகளின் படி பிரச்சாரம் முடியும் இறுதி நாளில், தனதுசொந்தத் தொகுதியான கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தனது 20 நாட்கள் நீடிக்கும் பரப்புரைப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

