ECR facebook
தமிழ்நாடு

ECR-ல் திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள், பெண்களை துரத்திய விவகாரம்: ஒருவர் கைது!

சென்னை இசிஆரில் பெண்களை துரத்திய விவகாரத்தில் இளைஞர்களின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

சென்னையை அடுத்த கானத்தூரில் கடந்த 25ஆம் தேதி இரவு கார் ஒன்றில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் 8 பேர் துரத்தியதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது.

இதுதொடர்பாக கானத்தூர் காவல் துறையினர் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திமுக கொடி பொருத்திய அந்த கார், கிழக்கு தாம்பரத்தில் ஒரு வீட்டில் இருந்துள்ளது. அதனை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்த காரை பயன்படுத்தி வந்தது சந்துரு என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, வழக்கு தொடர்பாக மற்றொரு காரை பொத்தேரி அருகே பறிமுதல் செய்த காவல் துறையினர், ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.