ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக அண்மையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் பாறைகள் உருண்டு விபத்துகுள்ளானது. இதையடுத்து திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலையில் கொப்பரை வைக்கும் இடத்திலிருந்து சுமார் 400 அடிக்கு ஒரு சரிவு ஏற்பட்டதாகவும், அரைமலை பகுதியில் இருந்து சுமார் 600 அடிக்கு கீழ் மற்றொரு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், வனத்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் புவியியல்துறை அதிகாரிகள் 2668 அடி உயரம் உள்ள மலைக்குச் சென்று இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு அறிக்கை வெளியான பின்னரே வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபம் பிரம்மோற்சவம் விழாவின் போது மலையின் உச்சிக்கு 2000 பக்தர்களை அனுமதிப்பார்களா? இல்லையா? என்பது தெரியவரும். அதிகாரிகளின் அறிக்கையை இன்று அல்லது நாளை தமிழக அரசிடம் வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குழு ஆய்வறிக்கைக்கு பின், முதல்வரோடு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றே இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் பேட்டியளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் கொப்பரை கொண்டு செல்லும் மலைப்பாதையில் அண்மையில் பெய்த மழையின் நீர் தற்போதுவரை வெளியேறி வருவதால், மலையின் ஒரு சில பகுதிகள் தற்போது வழுவழுப்பாக காணப்படுகின்றது. இதனால் 2500 பக்தர்கள் எப்படி மலைக்குச் செல்ல முடியும் என்ற கேள்வியும் எழுதுள்ளது.
இதற்கிடையே, மண் சரிவுக்கு என்ன காரணம் என்பதுபற்றி அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளனர். அதனை, இங்கே காணலாம்..