CBSE  FACEBOOK
தமிழ்நாடு

அடுத்த செக்! CBSE பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசின் அனுமதி தேவையில்லை!

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது.

PT WEB

சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனுமதிக்கான விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தொடங்கலாம் என்றும், தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க அனுமதி கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா என மாநில கல்வித்துறையிடம் கருத்து கேட்கப்படும் என்றும், மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, சி.பி.எஸ்.சி. பள்ளி தொடங்குவதற்கு மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நிலையில், தற்போது அந்த விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.