கூடலூர்: அநாகரிகமாக நடந்துகொண்ட அரசுப்பேருந்து நடத்துநர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நீலகிரி: ‘போட்டுத்தள்ளிடுவேன் பாத்துக்க..’ பேருந்து பயணிகளை மிரட்டிய நடத்துனர் #ShockingVideo

கூடலூரில் அரசு பேருந்தில் ஏறிய பள்ளி மாணவி, தன் ஊரில் தன்னை இறக்கி விடும்படி கூறியுள்ளார். அதை அங்கிருந்த பயணிகளும் வலியுறுத்தவே, அவர்களிடம் நடத்துனர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

webteam

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சேரம்பாடி வழியாக கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பேருந்தில் ஏறிய பள்ளி மாணவி ஒருவர் சேரம்பாடி காப்பிகாடு பகுதியில் தன்னை இறக்கி விட சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த பேருந்து நடத்துனர், “இது எக்ஸ்பிரஸ் பேருந்து. சேரம்பாடி காப்பிகாடு பகுதியில் நிறுத்த முடியாது” என கூறியிருக்கிறார்.

bus conductor

இதையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் மாணவியை அப்பகுதியில் இறக்கிவிடும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைடுத்து அந்த மாணவியை இறக்கி விட்ட நடத்துனர், மாணவிக்கு ஆதரவாக பேசிய பயணிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு “நீ அதிகாரிக்கு போன் பண்ணுவியா?” என ஆரம்பித்து, வாடா போடா, பைத்தியக்காரன், போட்டுத் தள்ளி விடுவேன் போன்ற அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி கடும் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. செய்தியிலும் அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு எதிராக கண்டனங்கள் எடுத்துள்ள நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.