என்.ஐ.ஏ - சென்னை உயர்நீதிமன்றம்
என்.ஐ.ஏ - சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் தொடரும் என்.ஐ.ஏ சோதனை - நீதிமன்றத்தை நாடியது நா.த.க.!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு பொருள் உதவி செய்வதாக காரணம் கூறி, நாம் தமிழர் கட்சியின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகாமை அமைப்பினர் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

seeman

இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, நெல்லை, திருச்சி, தென்காசி, இளையான்குடி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தவகையில், திருச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூட்யூபர் சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் விஷ்ணு வீட்டிலும் காலை 5 மணி முதல் என் ஐ ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதோடுகூட நாம் தமிழர் கட்சியின் பிரபல பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக்கு இன்று காலை 7.30 மணி அளவில் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதன்படி, 9.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் தான் வெளியூரில் இருப்பதால் ஐந்தாம் தேதி ஆஜராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ சோதனைக்கு எதிராக முறையீடு செய்துள்ளனர். சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் சோதனை செய்வதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எல்.ரமேஷ் முன்பு முறையிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

என்.ஐ.ஏ சோதனை சட்ட விதிமீறல் என குற்றம்சாட்டி நா.த.க சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், மனுவை பிற்பகலில் விசாரணை செய்வதாக நீதிபதி எம் எஸ் ரமேஷ் தெரிவித்துள்ளார்.