நயினார் நாகேந்திரன் pt desk
தமிழ்நாடு

ED-யை வைத்து மிரட்டி அதிமுக-வை கூட்டணியில் சேர்க்கவில்லை – நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி கூட்டணி சேர்க்கவில்லை. அவர்கள் செய்த தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்....

பாஜக மிகப்பெரிய கட்சி, தமிழகத்தில் 19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 2926 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க தயாராக இருக்கிறோம் என்றவரிடம்... நமது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலை விரிவாக பார்க்கலாம்...

பிரிந்த அதிமுகவை இணைக்க ஏதேனும் முயற்சிகள் எடுப்பீர்களா?

ஓபிஎஸ், டிடிவி தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார்கள். தற்போது இபிஎஸ் இணைந்திருக்கிறார் தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள். பாஜக இந்து சார்ந்த கட்சி இல்லை. அனைவருக்குமான கட்சி. மதத்திற்கான தனி சட்டம் போடவில்லை, ஒரு சட்டம் போட்டால் அது எல்லோருக்குமானது. பாஜக எல்லோருக்குமான கட்சியாக செயல்படுகிறது

விஜய் பாஜக-வை விமர்சிக்க என்ன காரணம்?

விஜய் அறிக்கையில், பாஜக-வை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை விஜய்-க்கு பயமா என்ன காரணம் என்று தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது தான். அதுதான் எங்கள் நோக்கம். அதற்கு யார் வந்தாலும் அவர்களை சேர்த்துக் கொள்கிறோம்.

ed

அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி அதிமுகவை கூட்டணியில் இணைத்துள்ளீர்களா?

அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி கூட்டணி சேர்க்கவில்லை. அமலாக்கத்துறையை ஒரு தனி அமைப்பு. யார் யார் தவறாக பணப் பரிவர்த்தனை செய்கிறார்களோ அவர்கள் வீட்டுக்கு வீடு வருவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும். அண்ணாமலை என்ன சித்தாந்தத்தை மேற்கொண்டாரோ அதை நாங்களும் பின்பற்றி கட்சியை வளர்க்க இருக்கிறோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.