தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இன்று, காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வேப்பாரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்திற்குச் சென்ற அவர் திமுக தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில், ”தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.