செய்தியாளர்: எம் துரைசாமி
நாமக்கல் அடுத்த வகுரம்பட்டி தண்டவாளத்தில் ஆண் மற்றும் பெண் சடலங்கள் கிடப்பதாக ரயில்வே காவல் துறைக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறை மற்றும் நாமக்கல் காவல் துறையினர் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்தவர்கள் நாமக்கல் தில்லைபுரத்தில் வசித்து வந்த சுப்பிரமணியன் (54), அவரது மனைவி பிரமிளா (50) ஆகியோர் என்பது தெரியவந்தது.
சுப்பிரமணியன் திருச்சி போக்குவரத்து துறையில் செயலாக்கப் பரிவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகவும், அவரது மனைவி பிரமிளா ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.