செய்தியாளர்: மணிகண்டபிரபு
பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரைக்கு வந்திருந்த நிலையில், ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் நயினார் நாகேந்திரனும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர்.
ஏற்கனவே எடப்பாடி பழன்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை அமித்ஷா இறுதி செய்த நிலையில், கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் உள்ளதாக நயினார் நாகேந்திரன் பேசி வருகிறார். இந்நிலையில் நாளை மதுரைக்கு அமித்ஷா வருகை தர உள்ளதால் இன்று நயினார் நாகேந்திரனும், ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.