எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காது என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
தஞ்சையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி ஒவைசி கட்சியுடன் மட்டுமல்ல எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். ஒவைசி மீது எனக்கு மதிப்பு உண்டு. அவ்வளவுதான். நாங்கள் வேட்பாளரையே இறுதி செய்து விட்டோம். புதிய வேளாண் சட்டங்களால் எந்த பயனும் இல்லை” என்றார்.