தமிழ்நாடு

மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் பதவியேற்பு 

webteam

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எம்பிக்கள் இன்று பதவியேற்று கொண்டனர். 

அதிமுக உள்பட 5 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதிமுக உறுப்பினர்கள் லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்னவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் நேற்று மாநிலங்களவையில் உரை நிகழ்த்தி விடைபெற்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எம்பிக்கள் 6 பேரும் இன்று பதவியேற்று கொண்டனர். தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வான சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் எம்.பியாக பதவியேற்று கொண்டனர். அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். 

திமுக கூட்டணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார் வைகோ. அப்போது வைகோவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் திமுகவை சேர்ந்த சண்முகம், வில்சன் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எம்.பிக்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.