நெஞ்சுவலி காரணமாக விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு இன்று நிறைவுபெறும் நிலையில், மாநாட்டில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று காலை திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையெடுத்து அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, அமைச்சர்கள் பொன்முடி, சி.வி. கணேசன் மற்றும் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் அவருடைய உடல்நிலை தேறியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.