தமிழ்நாட்டுக்கு 327 தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்தது தேர்தல் ஆணையம்.... 136 பொது பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 151 செலவின பார்வையாளர்கள் நியமனம்.....
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்... பாதுகாப்பு, செலவினங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பார்கள் என அறிவிப்பு...
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் இதுவரை 23.28 கோடி ரூபாய் பணம் பறிமுதல்... மாநிலம் முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...
சட்டமன்றத் தேர்தலையொட்டி வேட்பாளர் நேர்காணலை தொடங்கியது திமுக... புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களிடம் விவரம் கேட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று நேர்காணல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.... திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அழைப்பு...
தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக - மார்க்ஸிஸ்ட் இடையே நடந்த 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் இழுபறி.. கூடுதல் தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளதாக பெ.சண்முகம் பேட்டி.
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளுக்கு இசைவு தெரிவிக்குமா இந்திய கம்யூனிஸ்ட்?.... இன்று தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு என தகவல்...
பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குறித்து ஆபாசமாக பேசிய சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு...
பெண்களை இழிவுபடுத்துவதே அதிமுகவின் வாடிக்கை என திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்.... சி.வி.சண்முகம் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தல்....
நடிகையை குறிப்பிட்டு பேசிய அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு பாஜக நிர்வாகி குஷ்பு கண்டனம்... குறுகிய மனப்பான்மை, தவறான வளர்ப்பை வெளிப்படுத்துவதாக சாடல்...
நடிகைகளை கேவலமான முறையில் பேசத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?, தலைவர்கள் இதைத்தான் கற்றுக்கொடுத்தார்களா?... சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்...
பாமக சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..... நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை மே 10க்கு பின் மேற்கொள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்கு உத்தரவு....
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ராமதாஸின் நிலைப்பாடு என்ன?... தைலாபுரத்தில் இன்று நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு....
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய சிபிஐ... அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்ததாக, சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி பேட்டி..
சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூரில் போட்டியிடுகிறாரா விஜய்?.... கொடுங்கையூரில் ஏசி வசதியுடன் கூடிய தேர்தல் பணிமனை அமைக்கும் பணிகள் தீவிரம்....
தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என ஆதவ் அர்ஜூனா திட்டவட்டம்... 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என பேரம் பேசப்பட்டதாகவும் பேச்சு...
காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை... ஆதவ் அர்ஜுனாவின் அவதூறுக்கு பதிலடி கொடுத்து, தனக்கு துணை நின்றவர்களுக்கும் நன்றி தெரிவித்த ரஜினி...
நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனாவிடம் கேள்வி எழுப்பிய தவெக நிர்வாகி... ஏன் அப்படி பேசினீர்கள் என்பதை விளக்க வேண்டுமென மேடையில் பேசியதால் சலசலப்பு...
தெலுங்கு பட நிகழ்ச்சியில் தனது சாதி அடையாளத்தை குறிப்பிட்டு, பேசிய விவகாரம்... சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மன்னிப்பு கோரினார் நடிகர் பார்த்திபன்...
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்... கூடுதல் தொகுதிகள், மாநில அந்தஸ்தை என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி கோருவதால் நீடிக்கும் இழுபறி...
மேற்குவங்கம் சட்டமன்றத் தேர்தலில் 291 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி போட்டி... வேட்பாளர்களை பட்டியலை வெளியிட்ட மம்தா பானர்ஜி...
கேரளத்தில் 55 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்... மாநிலத் தலைவர் சதீஷன் பரவூர் தொகுதியிலும், ரமேஷ் சென்னிதாலா ஹரிப்பாடு தொகுதியிலும் போட்டி....
குழந்தையை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு பலன்களை வழங்குவதில் இருந்த வயது கட்டுப்பாடு நீக்கம்... மகப்பேறு விடுப்பை அங்கீகரிக்கும் வகையில் சட்டம் இயற்றவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு...
மேலும், 46 ஆயிரம் டன் சமையல் எரிவாயுவுடன் இந்தியா வந்து சேர்ந்தது நந்தாதேவி கப்பல்... 2 நாட்களில் மட்டும் 2 கப்பல்களில் 90 ஆயிரம் டன் எரிவாயு வருகை...
நாடு முழுவதும் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்... பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம்....
மேற்காசியாவில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்... ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது குறித்து ஆலோசனை...
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கண்டனம்... பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை விரைவில் மீட்டெடுக்க, தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இணைந்து பணியாற்றுவோம் என உறுதி...
இலங்கையில் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க அதிபர் அனுர குமார திசநாயக்க உத்தரவு... மேற்காசிய போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை...
ஈரான் தலைநகரில் தொடரும் குண்டுவெடிப்புகள், எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் அச்சம்... பாதுகாப்பு தேடி, தெஹ்ரானில் இருந்து காஸ்பியன் கடற்கரை நகரங்களுக்கு புலம்பெயரும் அவலம்....
ஈரானின் இரண்டு முக்கிய தலைவர்களை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு... இஸ்ரேல் தகவலை மறுத்து பாதுகாப்பு பிரிவு தலைவர் அலி லாரிஜனி கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்ட ஈரான்...
இஸ்ரேலின் மத்திய பகுதிகளை குறிவைக்கும் ஈரான் ராணுவம்... ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான வாகனங்கள், கட்டடங்கள் சேதம்...
ஈரானின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம்... இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்...
மேற்காசியா பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க் கப்பல்... ஈரான் மீதான தாக்குதல் தீவிரமெடுக்குமென ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில் தொடரும் பதற்றம்...
அமெரிக்காவில் ட்ரம்பால் நியமிக்கப்பட்ட உளவுத்துறை உயரதிகாரி ஜோசப் கென்ட் ராஜினாமா... ஈரானுடனான போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அதிருப்தியால் பணி விலகல்...
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்ததாக தகவல்... பல்கலைக்கழகம், சந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்...
சீனாவில் முதியவர்களை பராமரிக்கும் மையங்களில் ரோபோக்கள் அறிமுகம்... கலந்துரையாடுவது, உணவு உபசரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைப்பு...
ஜெர்சியில் எண்ணை மாற்றுகிறாரா கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி... முகநூலில் வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி...
மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேற்றம்... அரையிறுதியில் சீனாவை 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி...