தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு, விற்பனை தொடர்பாக இந்தாண்டில் மே மாதம் வரை மட்டும் 5, 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 480 பேர் கைது செய்யப்பட்டதாக டிஜிபி சங்கர் ஜிவால், புதிய தலைமுறைக்கு பிரத்யேக தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழ்நாடு காவல் துறை கடுமையான சட்ட நடவடிக்கைகளை பின்பற்றி வருவதாக அவர் கூறியுள்ளார். 2022 முதல் 2025 மே வரை போதைப்பொருள் பயன்பாடு, விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் கைதானவர்களின் விவரங்களை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2022ஆம் ஆண்டு 10 ஆயிரத்து 665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 ,934 பேர் கைது செய்யப்பட்டனர். 2023இல் 10 ஆயிரத்து 256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 ,470 பேர் கைது செய்யப்பட்டனர். 2024இல் 11 ஆயிரத்து 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 ,903 பேர் கைது செய்யப்பட்டனர். 2025இல் மே மாதம் வரை 5 ஆயிரத்து 488 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 ஆயிரத்து 480 பேர் கைது செய்யப்பட்டதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.