TN CM MK STALIN
TN CM MK STALIN TWITTER
தமிழ்நாடு

"விமர்சனங்களில் நல்லதை எடுத்துக் கொள்வேன், கெட்டதை புறம் தள்ளுவேன்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

"விமர்சனம் பற்றி எதுவும் நான் கவலைப்படவில்லை, நல்லதை எடுத்துக் கொள்வேன், கெட்டதை புறம் தள்ளுவேன்" என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப் பெற்று இன்று மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

stalin

இந்நிகழ்வில், நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தங்கம் தென்னரசு, சாமிநாதன், ரகுபதி, சேகர்பாபு சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் இருந்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் "விமர்சனம் பற்றி எதுவும் நான் கவலைப்படவில்லை; நல்லதை எடுத்துக் கொள்வேன், கெட்டதை புறம் தள்ளுவேன்" என்றார்.

STALIN

மேலும் பேசிய அவர், "ஆட்சி பொறுப்பேற்று இதே இடத்தில் நான் கூறினேன். இந்த ஆட்சி ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் இல்லை ஓட்டு போடாதவர்களுக்குமான ஆட்சி. இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையனும் ; ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லை என்று வருந்த வேண்டும். அந்த அடிப்படையில் ஆட்சி இருக்கும் என்று அன்றே சொன்னேன். அப்படிதான் இந்த ஆட்சி இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டு எப்படி ஒத்துழைப்பு வழங்கினீர்களோ மூன்றாம் ஆண்டிலும் அதேபோன்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.