அமைச்சர் சேகர்பாபு file
தமிழ்நாடு

”தமிழிசை எனப் பெயர் வைத்ததற்காக குமரி ஆனந்தன் வருத்தப்பட்டிருப்பார்” - அமைச்சர் சேகர்பாபு

”தமிழிசை எனப் பெயர் வைத்ததற்காக குமரி ஆனந்தன் வருத்தப்பட்டிருப்பார். தென் சென்னையில் திமுகவால் காலி செய்யப்பட்ட தமிழிசையையும், அவரின் கட்சியையும் 2026 தேர்தலில் மக்கள் காலாவதி ஆக்குவார்கள்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

முதலமைச்சர் பிறந்த நாள் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, கவிஞர் வைரமுத்து உள்ளிடோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்....

இன்று தமிழிசை நடந்து கொண்டதை அவரின் தந்தை குமரி ஆனந்தன் பார்த்திருந்தால் மிகுந்த வருத்தப்பட்டிருப்பார். இவருக்கா தமிழிசை எனப் பெயர் வைத்தோம்? என்று மிகவும் வருத்தப்பட்டிருப்பார். இல்லங்கள் தோறும் சென்று கையெழுத்து வாங்குவோம் என்று சொன்னார்கள். ஆனால், ஊடக வெளிச்சத்திற்கு பாஜகவினரை வைத்துக் கொண்டு கையெழுத்து வாங்குகிறார்கள். பாஜகவை சார்ந்தவர்களை வைத்தே கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறார்கள்.

காலாவதி என்ற வார்த்தையை தமிழிசை பயன்படுத்தியுள்ளார். பாண்டிச்சேரியில் காலாவதியானவர் அவர்தான். தென் சென்னையில் திமுகவால் காலி செய்யப்பட்டவர் தமிழிசை. தமிழிசையையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் காலாவதியாக்க 2026 தேர்தலில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.