செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை X வலைதளம்
தமிழ்நாடு

இந்திய ஜனநாயகப் புலி.. அதிமுக.. இப்ப காங்கிரஸ்.. இது மன்சூர் அலிகான் அரசியல்..!

PT WEB

காங்கிரஸில் இணைத்துக் கொள்ள வேண்டி நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம் அளித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது அரசியல் ரீதியான அதிரடி கருத்துகளை வெளியிட்டு வருவார். பாஜக அரசை கடுமையாக எதிர்த்து வந்த மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியையும் நடத்திவந்தார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அதிமுக அலுவலகத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டார். ஆனால் அதிமுக
தரப்பில் எந்த பதிலும் வராததால், வேலூர் தொகுதியில் களம் கண்ட மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.

வாக்குப்பதிவுக்கு இரண்டுநாள் முன்னதாக உடல்நலக்குறைவால்
மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் தன்னை காங்கிரஸில் சேர்த்துக் கொள்ளுமாறு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து நேற்று நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொள்கைகள் ஏதுமின்றி கட்சி கட்சியாக அவர் மாறி வருவதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்துவருகிறது. முன்னதாக கடந்த மக்களவை தேர்தலில் நாதக சார்பில் மன்சூர் அலிகான் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.