ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட நபருக்கு 15 ஆண்டு சிறை pt
தமிழ்நாடு

வேலூர்| 2022-ல் ஜாமீன்.. 2025-ல் மீண்டும் அதே குற்றம் செய்த நபர்.. 15 ஆண்டு சிறை!

வேலூரில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் வழிபறியில் ஈடுபட்டு, ரயிலிலிருந்து தள்ளிவிட்ட நபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

வேலூரில் 2022-ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் வழிபறியில் ஈடுபட்டு, தள்ளிவிட்ட நபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. அவர் ஏற்கனவே 2025 பிப்ரவரி மாதம் கர்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 

கடந்த 2022ஆம் ஆண்டு தனது திருமண பத்திரிக்கையை வேலூரில் உள்ள நண்பர்களுக்கு வைக்க சென்னையில் இருந்து ரயிலில் வந்த 24 வயது இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து கொண்டு ஜாப்ராபேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஹேமராஜ் (25) என்ற இளைஞரை காட்பாடி ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது நன்றாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

ரயில் சேவை

இது தொடர்பான வழக்கு வேலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி கோகுலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். இதில் ஓடும் ரயிலில் வழிப்பறியில் ஈடுபட்டு இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் 15 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து குற்றவாளி ஹேமராஜ் பலத்த காவல்துறை பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

இவர் ஏற்கனவே இருந்த 2022 வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சமயத்தில் தான் கடந்த 2025 பிப்ரவரி மாதம் கோவையில் இருந்து திருப்பதி சென்ற விரைவு ரயிலில் தனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் இரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவத்தை செய்தார்.. அவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.