வைகோவிற்கு பதில் கொடுத்த மல்லை சத்யா முகநூல்
தமிழ்நாடு

மாத்தையா போன்று நான் துரோகியா?... - வைகோவிற்கு பதில் கொடுத்த மல்லை சத்யா!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மல்லை சத்யாவை மறைமுகமாக துரோகி என்று விமர்சித்திருந்த நிலையில், அதற்கு மல்லை சத்யா விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா இழைத்த துரோகம் போல், தமக்கு எதிராக மல்லை சத்யா சதி செய்து வந்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மறைமுகமாக சாட்டி இருந்தார். தொடர்ந்து, பூந்தமல்லியில் தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் தொடர்பான போஸ்டர் மற்றும் பேனர்களில் மல்லை சத்யா படம் இருக்கக் கூடாது என மதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளது. அதன்பேரில் மல்லை சத்யா பெயர் எதிலும் இடம்பெறவில்லை.

இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, இதற்கு, வாரிசு அரசியலுக்காக வைகோ தனக்கு துரோகிப் பட்டம் கொடுத்துள்ளதாக மல்லை சத்யா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கு மீண்டு பதிலளித்துள்ள மல்லை சத்யா விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” மாத்தையா போன்று நான் துரோகியா?... 32 ஆண்டுகளா வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி கட்சி தலைவர் திரு வைகோ என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்ட கடந்த 09 07 25 தொடங்கி 13 07 25 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை என் தூக்கத்தை தொலைத்து விட்டேன் என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் மாமனிதர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள் வேறு

மல்லை சத்யா

ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே அன்புத் தலைவர் திரு வைகோ அவர்களே அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா

தங்களுக்கு கிடைத்தது வேதனையில் துடிக்கின்றேன் நான் என் அன்புத் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன் இனி எக்காலத்திலும் யார் மீதும், எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம் அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல .” என்று தெரிவித்துள்ளார்.