விளையாட்டு மைதானம் கூகுள்
தமிழ்நாடு

மதுரை | "போட்டிக்காக வந்த வீரர்களுக்கு தரமற்ற உணவு" - பெற்றோர் வேதனை!

மதுரையில் 65வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்ட வீரர்களுக்கு சரியான உணவு இல்லை என்று அவர்களது பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

PT WEB

மதுரையில் 65வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொண்ட வீரர்களுக்கு சரியான உணவு இல்லை என்றும் காலை உணவு தரமற்றதாக இருந்ததாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 65 ஆவது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலாக மதுரையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் பெற்றோர்களும் பாதுகாப்பிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் காலை உணவு தரமற்ற முறையில் வழங்கியதாகவும் அந்த உணவை சாப்பிட முடியாத சூழ்நிலை இருந்ததாகவும் தற்போது மதியம் இரண்டு 2.45 மணி வரையும் உணவு ஏதும் கொடுக்கப்படவில்லை எனவும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

சாப்பாடு கொடுக்காததால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். பிரச்னை பெரிதான நிலையில் பிற்பகலுக்கு மேலே உணவு கொண்டு வரப்பட்டு, சாப்பிடாதவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.