கத்துவட்டிக் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் மக்கள் pt desk
தமிழ்நாடு

மதுரை | ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் கத்துவட்டிக் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் மக்கள்

நகைக் கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்: கந்துவட்டி கொடுமையால் பரிதவிக்கும் குடும்பத்தினர்

PT WEB

செய்தியாளர்: பிரசன்னா

நகைக் கடன் பெற்றவர்கள் மறுஅடகு வைப்பதில் கடுமையான நிபந்தனைகளைகளுடன் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துளளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI

வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறுஅடகு வைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் முழு பணத்தையும் புரட்ட வேண்டிய சூழ்நிலையில் கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கக்கூடிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது.

ஆனால், தற்போது நகை கடனுக்கான அசல் வட்டி முழுவதையும் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் வங்கிகளின் நகைக் கடனை நம்பி உள்ளோர் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மீண்டும் கந்து வட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கல்வி மருத்துவ தேவைக்காக நகைகளை அடமானம் வைத்துள்ள ஏழை எளிய குடும்பத்தினர் தற்பொழுது நகையை மீட்க கந்துவட்டி கும்பலிடம் ராக்கெட் வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.