பாலமேடு ஜல்லிக்கட்டு முகநூல்
தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு|களத்தில் ஆட்டம் காட்டிய வீர மங்கையர்களின் காளைகள்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 வயதான பவானி என்பவர் வளர்க்கும் காளை களமிறக்கப்பட்டது.

PT WEB

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீர மங்கையர்களின் காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு ஆட்டம் காட்டின. அதிரடி வெற்றிகளையும் ஈட்டின.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 வயதான பவானி என்பவர் வளர்க்கும் காளை களமிறக்கப்பட்டது. இந்த காளை வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்ததில் இருந்து ஜல்லிக்கட்டு மைதானத்தில் வீரர்களுக்கு ஆட்டம் காட்டி, பிடிபடாமல் தப்பி பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றது.

இதேபோல பெண்கள் ஆர்வத்துடன் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைகளை, பாலமேட்டில் களமிறக்கி வெற்றியைக்கனியை பறித்துச்சென்றனர் . மதுரையில் பிரதானமாக நடைபெறும் 3 ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் பாலமேட்டுக்கு அதிக அளவிலான பார்வையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். விதவிதமான காளைகளையும் அவற்றின் சீற்றமான ஆட்டத்தையும் பார்வையாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.