சு.வெங்கடேசன் எம்பி
சு.வெங்கடேசன் எம்பி pt desk

”ரயில்வே நிர்வாகத்தின் காதில் விழ ஏன் ஐந்து நாட்கள் ஆனது?” - சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டத்திற்கு துரோகம் செய்திப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் மீது மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு.

ஜனவரி 10ம் தேதி சென்னை வந்திருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி இடையேயான புதிய ரயில் பாதை திட்டத்தை மாநில அரசு அதை கைவிட வேண்டும் என்று கூறியதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் சிவசங்கர் சார்பில் தமிழ்நாடு அரசு சார்பில் அப்படி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் ஐந்து நாட்களுக்கு பிறகு ரயில்வே துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இரைச்சல் காரணமாக செய்தியாளர்களின் கேள்வியை தெளிவாக கேட்க முடியவில்லை என்றும் தனுஷ்கோடி திட்டம் குறித்த தனது பதிலை செய்தியாளர்கள் தவறாக புரிந்து கொண்டனர் என்று ரயில்வே அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசுடன் எந்த நிலப்பிரச்சனையும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தன்னுடைய கடுமையான கண்டனத்தை மத்திய அமைச்சருக்கு தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி புதிய பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், அதை கைவிடக் கூறியதால் அது கைவிடப்பட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ரூ.100 கோடி நிதி ஒதுக்கிய திட்டத்தை, கைவிடுவதாக மத்திய அரசு எப்படி அறிவித்தது:

அதில், கடந்த இடைக்கால பட்ஜெட்டில் 100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் 18 கோடியும் ஒதுக்கி இருப்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளேன். அதற்கு முழு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். இப்போது அந்தத் திட்டமே கைவிடப்பட்டது என்று அவர் அறிவித்தது அதிர்ச்சியை அளித்தது. அதுவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அது கைவிடப்பட்டதாக அவர் அறிவித்தார். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கட்டும் என்று காத்திருந்தேன். தமிழக அமைச்சரும் இந்த திட்டத்தை கைவிடச் சொல்லி தாங்கள் கூறவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் கூறுவது பொய் என்றும் விளக்கியுள்ளார். தாங்கள் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் கோரியிருந்தோம் என்று விளக்கி இருந்தார்.

சு.வெங்கடேசன் எம்பி
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கம்

தமிழக அரசு கைவிடக் கூறியதாக மத்திய அமைச்சர் கூறுவது பொய்:

இப்போது ரயில்வே அமைச்சர், தமிழக அரசு கைவிட கோரியது தனுஷ்கோடி திட்டத்தை தான் என்றும் செய்தியாளர்களுடைய சத்தங்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனுஷ்கோடி திட்டம் தான் கேட்கிறார்கள் என்று நினைத்து தமிழக அரசு கைவிடக் கூறியதாக கூறிவிட்டதாகவும் உண்மையில் தூத்துக்குடி திட்டம் கைவிடப்படவில்லை என்றும் அதற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்னை இல்லை என்றும் இப்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது அனைத்து ஊடகங்களிலும் ஒரே மாதிரியாக வந்துள்ள போது, சத்தத்தால் குழப்பம் ஏற்பட்டதாக அமைச்சர் சொல்வது ஏற்கக் கூடியதாக இல்லை. செய்தியாளர் சந்திப்பின் காணொலியும் மிகத்தெளிவாகவே உள்ளது.

Railway project
Railway projectpt desk

ஊடகங்களில் வந்த செய்தியை உடனடியாக ஏன் மறுக்கவில்லை:

அமைச்சர் வேண்டுமென்றே தமிழக அரசின் மீது பழிபோடவே அவ்வாறு கூறினார் என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மை அப்படி இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் வந்த செய்தியை உடனடியாக ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. எல்லா விமர்சனங்களுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் பின் இப்போது தான் ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இப்படித்தான் அவர்கள் நாடாளுமன்றத்தில் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு திசை திருப்பும் பதில் அளிக்கிறார்கள். மழைக்கால கூட்டத் தொடரில் ரயில்வே அமைச்சர் அவையில் பேசிய ஆவேச பேச்சு மோசமான பதிலுக்கு நல்லதொரு உதாரணம். அதே போன்ற தொனியில் தான் தமிழ்நாடு அரசின் மீது பழி கூறிய அமைச்சரின் பேச்சும்.

சு.வெங்கடேசன் எம்பி
ஒரே மேடையில் சந்திப்பு | அன்பில் மகேஷ் VS விஜயபாஸ்கர்.. சொன்னது என்ன?

ரயில்வே அமைச்சரின் பொய்யான தகவலை நம்பி அண்ணாமலை போராட்டத்தை அறிவித்துள்ளார்:

புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் 30 சதம் பலமற்று இருக்கிறது என ரயில்வே பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டிய போது, வாய்திறக்காத பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சரின் பொய்யான தகவலை நம்பி வேகவேகமாக போராட்டத்தை அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து அதிமுகவும் போராட்டத்தை அறிவித்தது. உண்மையில் ஒன்றிய அரசு ரயில்வே துறையில் தமிழ்நாட்டை தொடர்ந்து எப்படி புறக்கணித்து வருகிறது என்பதை பற்றி அடிப்படை புரிதல் இருக்கும் யாரும் அமைச்சரின் பேச்சு எவ்வளவு அபத்தம் என்பதை ஆராயாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

hindi language issue ashwin is right annamalai
annamalaix page

நிதியை விரைந்து ஒதுக்க வேண்டும்:

ரயில்வே அமைச்சகமும், ரயில்வே அமைச்சரும் மக்கள் மத்தியில் உண்மையை பேச இனியாவது முன் வர வேண்டும். அந்த அளவு முயற்சிப்பது கடினம் என்றால் குறைந்த பட்சமாக மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கான நிதியை வரும் பட்ஜெட்டில் போதுமான அளவு ஒதுக்கி நியாயம் வழங்க முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com