VCK  File
தமிழ்நாடு

மதுரை | கொடிக் கம்பம் விவகாரம் - விசிகவினர் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரையில் விசிக கொடிக் கம்பம் விவகாரத்தில், வருவாய்த் துறையினரை தாக்கியதாக விசிக நிர்வாகிகள் உட்பட 21 பேர் மீது காவல் நிலையத்தில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி விசிக சார்பில் கொடிக் கம்பம் வைக்கப்பட்டது. இது அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விவாகரத்தை வருவாய்த்துறை சார்பில் துணை வட்டாச்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகியோர் விசாரிக்கச் சென்றனர். அப்போது, விசிகவினரால் அதிகாரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

VCK

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் அளித்த புகாரின் அடிப்படையில் விசிக மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் உள்ளிட்ட 5 விசிக நிர்வாகிகள் உட்பட 21 பேர் மீது அரசு ஊழியர்களை தாக்குதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,

உரிய அனுமதியின்றி விசிக கொடிக் கம்பம் நடப்பட்டதாக ஏற்கனவே சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.