செய்தியாளர்: மணிகண்டபிரபு
சமீபகாலமாக இருசக்கர வாகனத்தில் சாகசங்கள் செய்து அதனை ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் சிறுவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி ஓட்டி அதனை படம் பிடித்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. கோரிப்பாளையம் பிரதான சாலைகளில் இரண்டு சிறுவர்கள் தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனத்தை இயக்கிபடி ஆபத்தை உணராமல் அபாயகரமான முறையில் சாகசம் செய்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.