அமைச்சர் சேகர்பாபு file
தமிழ்நாடு

சீமான் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் - அமைச்சர் சேகர்பாபு

பெரியார் பற்றி சீமான் பேசிய பிறகு தான் ஈரோடு மண் திமுகவிற்கு சொந்தம் என ஈரோடு மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் அவர் இன்னும் கூட பேசட்டும் எங்கள் பணியை வேகப்படுத்துவோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: சந்தான குமார்

சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு பகுதி சார்பில் புரசைவாக்கம் பிரிக்லின் சாலை மற்றும் கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உணவு வழங்கினார்...

Seeman

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்...

தமிழகத்தின் நலனுக்காக முதலமைச்சர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். அவர் நீண்ட நெடுங்காலம் பன்னெடுங்காலம் தமிழகத்தின் முதல்வராகவும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் என்று பொதுமக்கள் வாழ்த்துவது எல்லாம் வல்ல இறைவனும் இயற்கையும் துணை இருக்க வேண்டும்..

தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்:

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மத்திய அமைச்சர் 5 ஆயிரம் கோடி உங்களுக்கு இழப்பு ஏற்படும். தர முடியாது என்று மறுத்துள்ளார். இருந்த போதும் அது 10 ஆயிரம் கோடியாக நீங்கள் மாற்றினாலும் எங்கள் இருமொழிக் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று உறுதியாக முதலமைச்சர் இருக்கிறார்.. பாஜக தலைவருக்கு பேசுகின்ற பொருள் வேறு ஏதும் கையில் இல்லை. தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளார்கள்.

CM Stalin

தாய் ஆட்சிக்குதான் முதலமைச்சர் அனுமதி கொடுப்பார்:

சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதை அதிகமாக பேசி அவருக்கு விளம்பரம் ஏற்படுத்தித் தர விரும்பவில்லை.. தாய் ஆட்சிக்குதான் முதலமைச்சர் அனுமதி கொடுப்பார்கள் சைத்தானின் ஆட்சிக்கு முதலமைச்சர் அனுமதிதர மாட்டார். அதிகார மீறலுக்கு முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார் என்றவரிடம் கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது என விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்...

சீமான் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்:

4ஆண்டு ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்களை திமுக செய்து வருகிறது. நேற்று கூட பெரியார் பெயரில் மருத்துவமனை திறந்து வைத்துள்ளார் முதல்வர். இதையெல்லாம் விளம்பரத்திற்காகவா என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், பெரியார் பற்றி சீமான் பேசிய பிறகுதான் ஈரோடு மண் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தம் என்று அந்த மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்.

Seeman

ஆகவே அவர் இன்னும் கூட பேசட்டும். நாங்கள் எங்களுடைய பணியின் வேகத்தை இந்த மண்ணினுடைய உரத்தை இன்னும் பலமாக்குவோம். சீமான் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.