கத்தி போடும் திருவிழா முகநூல்
தமிழ்நாடு

ஈரோட்டில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழா!

திருவிழாவின் முதல் நிகழ்வாக கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

PT WEB

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் விழா நடைபெற்றது.

திருவிழாவின் முதல் நிகழ்வாக கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்கள் கைகளில் கத்திகளை ஏந்தி இசைக்கேற்ப உடலில் கீறியபடி நடனமாடி வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்கள் பாரம்பரியமாக கைத்தறி நெசவுத் தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கைத்தறி நெசவுத் தொழில் மற்றும் விவசாயம் செழிக்க திருவிழா நடத்தப் படுவதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.