ஜெயலலிதா நகைகள் - நீதிமன்றம் போட்ட உத்தரவு
ஜெயலலிதா நகைகள் - நீதிமன்றம் போட்ட உத்தரவு புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த பொருட்கள்: தமிழகத்திடம் ஒப்படைக்க கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

webteam

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை, கர்நாடகாவில் பல ஆண்டுகளாக நடந்துவந்தது. அப்படியான நிலையில் கடந்த 2016ல் ஜெயலலிதா உயிரிழந்ததை அடுத்து இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலத்தில் விடும்படி பெங்களூரு சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

jayalalitha

இந்த மனு நீதிபதி மோகன் முன்னிலை விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு ஜனவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகாவுக்கு வழக்கு செலவாக 5 கோடி ரூபாய் செலுத்த, தமிழக அரசுக்கு நீதிபதி மோகன் உத்தரவிட்டிருந்தார். மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை கர்நாடகாவில் ஏலம் விடுவதற்கு பதிலாக, தமிழக அரசிடம் ஒப்படைக்க, சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், “பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை மார்ச் 6 மற்றும் 7ஆம் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு இரண்டு தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அன்று தமிழக உள்துறை முதன்மை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி ஆஜராக வேண்டும். பொருட்களை எடுத்துச் செல்ல ஆறு வாகனங்கள் கொண்டு வர வேண்டும். இதை பதிவு செய்ய வீடியோ மற்றும் போட்டோகிராபரை அழைத்து வர வேண்டும்” என உத்தரவிட்டார்.

Court order

இந்த வழக்கு செலவாக கர்நாடகாவுக்கு 5 கோடி ரூபாயை, தமிழக அரசு செலுத்தவில்லை என கர்நாடக அரசு வழக்கறிஞர் கிரண் ஜவளி தெரிவித்தார். இதையடுத்து மேலும் இந்த விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.