தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை குறிப்பிட்டு தனுஷ்தான் அரசியலுக்கு வந்துள்ளார் என கூறி முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த தனுஷ்தான் அரசியலுக்கு வந்துள்ளார் என நடிகர் தனுஷை குறிப்பிட்டு, முதல்வர் விஜய்யை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த கனிமொழி, 6 சிலிண்டர்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கான 4,000 ரூபாய் ஆகியவை வழங்கப்படவில்லை எனக் கூறினார். மேலும், 100 நாள் வேலைத் திட்டம் தமிழ்நாட்டில் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இதுகுறித்து விஜய் ஒரு வார்த்தை பேசியிருப்பாரா என கனிமொழி கேள்வி எழுப்பினார்.