சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவமே, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் இன்னும் மக்கள் மனதைவிட்டு அகலாத ரணமாக உள்ளது.
இந்த நிலையில், மற்றொரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த இளைஞர் ஒருவரை போலீஸார் தாக்கிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.