செய்தியாளர்: பாலாஜி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுதா மற்றும் அவரது கணவர் கண்ணன் மற்றும் இவர்களது மகன் கௌதம் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தலைமை தபால் நிலையம் முன்பு இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது உரசியுள்ளது.
இதில், நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுதா மற்றும் கௌதம் ஆகிய இருவர் மீதும் டிராக்டர் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண் முன்னே மனைவி மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.