தேனி | உடலில் காயங்களுடன் இரண்டு விவசாயிகள் சடலமாக மீட்பு – போலீசார் விசாரணை
செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்பாறை பஞ்சதாங்கி மலையடிவாரப் பகுதியில் விவசாயம் செய்து வந்தவர் வைகை நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா. அவரது உடலில் காயங்களுடன் அவருடைய இலவமர தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
அதேபோல் தங்கம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற விவசாயி, உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன அவருடைய எலுமிச்சை தோட்டத்திலும் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மர்ம வனவிலங்கு (கரடி) தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் கண்டமனூர் வனத்துறையினர் மற்றும் கடமலைக்குண்டு காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.