அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி கோப்பு படம்
தமிழ்நாடு

“அமைச்சர் கைது இல்லை” - அமலாக்கத்துறை தகவலை தொடர்ந்து வீடு திரும்பினார் பொன்முடி!

PT WEB

நேற்று இரவு 8 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அது தற்போது நிறைவு பெற்றுள்ளது. பொன்முடியின் விழுப்புரம், சென்னை இல்லங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையும் நிறைவு பெற்றுள்ளது.

நேற்று காலை 7 மணி முதல் நடைபெற்ற சோதனை, 19 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது. மேலும், “அமைச்சர் பொன்முடி கைது இல்லை” என அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து நள்ளிரவு 3:30 மணியளவில் புறப்பட்டு, வீடு திரும்பினார்.

தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பாணை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மகனும் எம்.பி-யுமான கௌதம சிகாமணிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் அமைச்சர் பொன்முடி, அவர் மகன்கள் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை தொடருமென சொல்லப்படுகிறது.