Rail break failure fire accident pt desk
தமிழ்நாடு

திருச்சி டூ திருவனந்தபுரம் - இன்டர்சிட்டி ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து... காரணம் என்ன?

கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி ரயிலின் கடைசி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி ரயில் இன்று காலை மதுரை கள்ளிக்குடி ரயில் நிலையம் வந்தது. அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் பிரேக் ஃபெயிலியர் காரணமாக தண்டவாளத்தில் சக்கரம் உராய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயில் பெட்டியில் இருந்தவர்கள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.

intercity express

தகவல் அறிந்து ரயில் நிலையத்திற்க வந்த கள்ளிக்குடி தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிரேக் ஃபெயிலியர் காரணமாக ரயிலில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.