இஸ்ரோ தலைவர் - வி.நாராயணன்  முகநூல்
தமிழ்நாடு

2047-க்கு முன் இந்தியா வல்லரசாகும் - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆகும் அதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ நிச்சயம் செய்யும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: நவ்பல் அஹமது

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்....

இஸ்ரோ

அனைத்து துறைளிலும் பெண்கள் முன்னேற வேண்டும். ஆண் பெண் பாகுபாடு பார்க்காமல் திறமையை பார்த்து வாய்ப்பு வழங்கப்படும் நிறுவனம் இஸ்ரோ. சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் தரை இறங்க அங்கிருந்து தாது மற்றும் கனிமங்களை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம். 9200 கிலோ எடை கொண்ட சந்திரயான் 4 இரண்டு ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது, 2028ல் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சர்வதேச கூட்டு முயற்சி என்பது தேவை தான், சிந்தட்டிக் அப்ரேச்சர் என்ற செயற்கைகோள் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியால் தயாராகி வருகிறது , ஜி20 நாடுகளுக்கான ஜி20 செயற்கைகோளை தயார் செய்ய உள்ளோம். இதற்கான பணிகள் நமது தலைமையில் நடைபெற்று வருகிறது. மீனவர்களுக்கு என்று பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு அது பயன்பாட்டில் உள்ளது, இதில் சர்வதேச எல்லை எங்கு உள்ளது, மீன்கள் எங்கு அதிக அளவில் உள்ளது,

Chandrayaan

அதேபோல் வானிலை எப்படி உள்ளது போன்ற பல தகவல்கள் நேரடியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை மீனவ மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். நிலவில் 8 விதமான தாதுகள் மற்றும் கனிமங்கள் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆகும் அதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ நிச்சயம் செய்யும் என கூறினார்