நாளை (நவம்பர் 30) நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் போது, மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரளிக்கவிருப்பதாக திமுக தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், மக்களவையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட திமுக இந்த மசோதாவை ஆதரிக்கும் பட்சத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
இதற்கிடையில் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலின், இல்லத்திற்கு ராகுல்காந்தி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, மம்தா பானர்ஜி, வேணுகோபால், சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் வருகை தந்தனர்.
அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் வந்து வரவேற்றார். தொடர்ந்து சோனியாகாந்தியை திமுக தலைவர் வாசலில் வரவேற்றிருக்கிறார். இதைத்தொடர்ந்து, நடைபெற்று சந்திப்பில், ஸ்டாலின் - அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது, ஸ்டாலினிடம் மசோதாவின் பாதிப்புகளை எடுத்துக் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதி மறுவரையறை ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தநிலையில், இந்த சந்திப்பின் திமுகவின் முடிவில் மாற்றம் ஏற்படுமா? அல்லது மசோதா ஆதரவு நிலைபாடே தொடருமா? எனக் கேள்வி எழுந்திருக்கிறது.