\
narendra modi
narendra modiani

தங்கத்தை தொடர்ந்து எண்ணெய் பயன்பாட்டை குறைக்க கோரும் மோடி.. என்ன காரணம் ?

சமையலில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவையும் குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அப்படி திடீரென எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க மோடி வலியுறுத்தியது ஏன்? இதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்...
Published on: 
Summary

பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உடல் பருமன் மற்றும் அதன் பாதிப்புகளை குறைக்க, உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினார். உடல் பருமன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், சுகாதாரத்தை மேம்படுத்த உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை என தெரிவித்தார்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடைபெற்ற 140-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். குறிப்பாக, நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் போதைப்பொருள் பழக்கம், அரசு ஊழியர்களின் திறன் மேம்பாடு, டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்துள்ளார். இதற்கிடையே, மக்களின் உடல்நலன் குறித்துப் பேசிய அவர், உணவில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவைக் குறைக்க வேண்டும் என்ற தனது முந்தைய அறிவுறுத்தலையும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். அதன்படி, ஒவ்வொருவரும் தங்களது உணவில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

narendra modi
narendra modiani

இதற்கான முக்கியக் காரணமாக உடல் பருமன் அதிகரித்து வருவதை மோடி சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, உடல் பருமன் என்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது. உணவில் அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் கலோரிகளை எடுத்துக்கொள்வதும், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி குறைவதும் உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணிகளாகக் கருதப்படுகின்றன. இதனால், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 110 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உடல் பருமன் தற்போது உலகளவில் மிக முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு, நாட்டில் உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சமையலில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே தங்கம் வாங்குவதைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு வேண்டுகோள்களை அவர் விடுத்திருந்த நிலையில், தற்போது உணவுப் பழக்கத்திலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

narendra modi
கட்டபொம்மன்.. எட்டப்பன்.. ராகுல் எச்சரிக்கை! ஸ்டாலினின் அதிரடி பதில்!