மழை  கோப்புப்படம்
தமிழ்நாடு

15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு?

15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, மதுரை, சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 9.1 செமீ மழை பதிவாகியுள்ளது. திருத்துறைபூண்டியில் 4.3 செமீ மழையும், தலைஞாயிறு பகுதியில் 4.2 செமீ மழையும் பதிவாகியுள்ளது. நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூரில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில்தான், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.